திருப்பூர்:மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பாடுபடும் பெண்கள், 'மகளிர் சக்தி' தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம்.மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பாடுபடும் பெண்களுக்கு, 'மகளிர் சக்தி' விருது வழங்கப்படுகிறது. தகுதியான தனி நபர்கள், மகளிர் குழுக்கள், நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.பெண்கள் நலனுக்காக சேவை செய்பவருக்கு, 'மகளிர் சக்தி' எனும் தேசிய விருது வழங்கப்படுகிறது. மகளிர் சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணர்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பங்களிப்பு, பெண் கொடுமை தடுப்பு உள்ளிட்ட சேவையாற்றிவரை பாராட்டி, இவ்விருது வழங்கப்படுகிறது.தனிநபர் விருது பெற்றால், விருதுடன் ஒரு லட்சம் ரூபாயும், நிறுவனமாக இருந்தால், இரண்டு லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள், www.narishaktipuraskar.wcd.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தகுதியான நபர்கள், 'ஆன்லைன்' மூலமாக மட்டும், 2021 ஜன., 7ம் தேதிக்குள் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வாகும் நபருக்கு, டில்லியில் நடக்கும் விழாவில், குடியரசு தலைவர் மூலமாக விருது வழங்கப்படும், என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE