தமிழ்நாடு

திண்டுக்கல்லில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை! இந்தாண்டு நடத்திய ஆய்வில் தகவல்

Added : டிச 04, 2020
Share
Advertisement
திண்டுக்கல்:‛ திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரு குழந்தை தொழிலாளர் கூட இல்லை' என இந்தாண்டு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.குடும்ப வறுமை உட்பட பல காரணங்களால் குழந்தைகள் இளம் வயதிலேயே வேலைக்கு செல்கின்றனர். அதனால் அவர்களின் கல்வி, எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது.இத்திட்டத்தின் கீழ் தொண்டு நிறுவனங்கள்
திண்டுக்கல்லில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை! இந்தாண்டு நடத்திய ஆய்வில் தகவல்

திண்டுக்கல்:‛ திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரு குழந்தை தொழிலாளர் கூட இல்லை' என இந்தாண்டு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குடும்ப வறுமை உட்பட பல காரணங்களால் குழந்தைகள் இளம் வயதிலேயே வேலைக்கு செல்கின்றனர். அதனால் அவர்களின் கல்வி, எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆய்வு நடத்தி, 14 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளை தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்துவது குறித்து கண்காணிக்கப்படுகிறது. மீட்கும் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து கல்வி கற்க வழிகாணப்படுகிறது. மாதாந்திர உதவி தொகையும் வழங்கப்படுகிறது.


குழந்தைத் தொழிலாளர் இல்லை


ஆண்டுதோறும் குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் கொரோனாவால் ஐந்து மாதங்களாக ஆய்வு நடத்தவில்லை. ஊரடங்கு தளர்வுக்கு பின் நடத்திய ஆய்வில் ஒரு குழந்தை தொழிலாளர் கூட இல்லை என்பது தெரிய வந்துள்ளது.கடந்தாண்டு திண்டுக்கல் தொழிற்சாலையில் மீட்ட சிறுவனை, அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்த்து படிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

வரும் ஆண்டுகளிலும் ஒரு குழந்தை தொழிலாளர் கூட இல்லாத மாவட்டமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்காக, வட்டாரம் வாரியாக ஒரு குழு அமைத்து, மாதந்தோறும் உணவகங்கள், விடுதிகள், தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்த உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X