வடமதுரை : வடமதுரையில் 'கோடைக்காய்' எனப்படும் இரண்டாம் சீசன் மாங்காய் விற்பனைக்கு வந்துள்ளது.
பொதுவாக சீசன் தவிர பருவம் தப்பி கிடைக்கும் காய்களை 'கோடைக்காய்' என கிராமங்களில் குறிப்பிடுகின்றனர். இந்த வகையில் தற்போது கல்லாமை, செந்துாரம் போன்ற மாங்காய் வரத்து ஏற்பட்டுள்ளது. மொத்த விற்பனையில் கிலோ ரூ.25 என்ற அளவில் உள்ளது.வியாபாரி மன்னார்சாமி கூறுகையில், ''நீர் வசதியுள்ள பகுதி மா மரங்களில் மட்டும், நவம்பர், டிசம்பரிலும் மாங்காய் கிடைக்கும். இவை பழுக்காது. ஊறுகாய் தயாரிக்கவும், சமையலுக்கும் பயன்படும். இதேபோல கொடிக்காய்புளி, நுங்கு போன்றவையும் பருவம் இல்லாத காலங்களிலும் கிடைக்கும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE