பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி ரசிகர் அணிகள் கொண்டாட்டம்

Added : டிச 04, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டதையடுத்து திண்டுக்கல்லில் அவரது ரசிகர்கள் இரு அணிகளாக இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.ரஜினிகாந்தின் புதிய கட்சி அறிவிப்பைத் தொடர்ந்து, திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் பயணிகளுக்கு ரசிகர்கள் இனிப்பு வழங்கினர். பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட

திண்டுக்கல் : நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டதையடுத்து திண்டுக்கல்லில் அவரது ரசிகர்கள் இரு அணிகளாக இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ரஜினிகாந்தின் புதிய கட்சி அறிவிப்பைத் தொடர்ந்து, திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் பயணிகளுக்கு ரசிகர்கள் இனிப்பு வழங்கினர். பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர் அரவிந்த் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். அதேபோல் மற்றொரு தரப்பினர் முன்னாள் நிர்வாகி வெங்கடேசன் தலைமையிலும் பஸ்ஸ்டாண்டில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.

பழநி: இங்குள்ள பஸ்ஸ்டாண்டில் கொட்டும் மழையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர். நகர செயலாளர் முருகானந்தம், மாணவர் அணி இணைசெயலாளர் சிக்கந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட துணை செயலாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் சபாபதி, நகர செயலாளர் சரவணன், நகர இணை செயலாளர் ஜாகீர் உசேன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X