நெற்பயிரில் இலைச் சுருட்டு புழுவா: ஒட்டுண்ணி ரெடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெற்பயிரில் இலைச் சுருட்டு புழுவா: ஒட்டுண்ணி ரெடி

Added : டிச 04, 2020
Share
மதுரை : ''நெற்பயிரில் இலைச் சுருட்டு புழுக்களின் தாக்குதல் காணப்பட்டால் டிரைக்கோகிரேம்மா கிலோனிஸ் முட்டை ஒட்டுண்ணிகளை நடவு செய்து கட்டுப்படுத்தலாம்'' என மதுரை வேளாண் அறிவியல் மைய உதவி பேராசிரியர் உஷாராணி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: மதுரை மேற்கு, கிழக்கு, வாடிப்பட்டி, அலங்காநல்லுார், மேலுாரில் நெற்பயிர்களில் இலைச்சுருட்டு புழுக்கள் காணப்படுகின்றன. இவை

மதுரை : ''நெற்பயிரில் இலைச் சுருட்டு புழுக்களின் தாக்குதல் காணப்பட்டால் டிரைக்கோகிரேம்மா கிலோனிஸ் முட்டை ஒட்டுண்ணிகளை நடவு செய்து கட்டுப்படுத்தலாம்'' என மதுரை வேளாண் அறிவியல் மைய உதவி பேராசிரியர் உஷாராணி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மதுரை மேற்கு, கிழக்கு, வாடிப்பட்டி, அலங்காநல்லுார், மேலுாரில் நெற்பயிர்களில் இலைச்சுருட்டு புழுக்கள் காணப்படுகின்றன. இவை சுரண்டிய இலைகள் பச்சையமின்றி கண்ணாடி போல தெரியும். எல்லா பருவத்திலும் தாக்கும் என்றாலும் பூக்கும் பருவத்தில் தாக்கினால் மகசூல் குறையும். இவை புல், பூண்டுகளில் காணப்படும் என்பதால், வயல்வெளிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

தழைச்சத்தை ஒரே முறையாகவோ, தேவைக்கு அதிகமாகவோ இடக்கூடாது. முள் உள்ள கொப்புகளை கொண்டு பாதிக்கப்பட்ட இலையின் மடிப்புகளை திறக்க வேண்டும். இரவில் எக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். பயிர் நடவு செய்த 37 வது, 44 மற்றும் 51 நாட்களில் 2 சி.சி. என்ற அளவில் 'டிரைக்கோகிரேம்மா கிலோனிஸ்' முட்டை ஒட்டுண்ணிகளை இட்டு பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். சேதமதிப்பு அதிகமாக இருந்தால் எக்டேருக்கு ஒரு கிலோ பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ் பயன்படுத்த வேண்டும்.

எக்டேருக்கு 25 கிலோ வேப்பங்கொட்டை சாறு அல்லது வேப்பெண்ணெய் ஒரு லிட்டருக்கு 30 மில்லி கலந்து தெளிக்க வேண்டும். அதிக பாதிப்பு இருந்தால் எக்டேருக்கு 1000 கிராம் கார்டேப்ைஹட்ரோகுளோரைட் 50 %எஸ்.பியை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.தழைச்சத்து அதிகமாக இட்ட வயல் மற்றும் நிழல் இருக்கும் பகுதியில் பூச்சி தாக்குதல் அதிகம் உள்ளது. இலைவண்ண அட்டையை பயன்படுத்தி 3 தடவையாக யூரியாவை வேப்பம்புண்ணாக்குடன் கலந்து இடவேண்டும். கார்போபியூரான் குருணை மருந்து, செயற்கை பைரித்ராய்டு பூச்சிகொல்லி மருந்துகளால் பூச்சி தாக்குதல் அதிகரிக்கிறது. எனவே அவற்றை தவிர்க்க வேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X