சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : டிச 04, 2020
Share
Advertisement
பெட்டி கடையை சேதப்படுத்தியவர் கைதுசோழவந்தான்: தென்கரை, புதுார் செந்தில் 44. இவரது பெட்டி கடையை கருப்பட்டி தனுஷ்38, உள்ளிட்டோர் பணம் தராமல் சிகரெட் கேட்டு சேதப்படுத்தினர். மேலும் செந்திலின் மருமகன் தனியார் நிதி நிறுவன ஊழியர் சரவணனை 29,ஆயுதங்களால் தாக்கி வசூல் பணம்ரூ.40,500 மற்றும் அலைபேசியைபறித்து சென்றனர். இதுதொடர்பாக தெ.புதுார் முத்துவன்னியை30, கைது செய்த போலீசார், தனுஷ்,

பெட்டி கடையை சேதப்படுத்தியவர் கைது

சோழவந்தான்: தென்கரை, புதுார் செந்தில் 44. இவரது பெட்டி கடையை கருப்பட்டி தனுஷ்38, உள்ளிட்டோர் பணம் தராமல் சிகரெட் கேட்டு சேதப்படுத்தினர். மேலும் செந்திலின் மருமகன் தனியார் நிதி நிறுவன ஊழியர் சரவணனை 29,ஆயுதங்களால் தாக்கி வசூல் பணம்ரூ.40,500 மற்றும் அலைபேசியைபறித்து சென்றனர். இதுதொடர்பாக தெ.புதுார் முத்துவன்னியை30, கைது செய்த போலீசார், தனுஷ், ராம்குமார் 22, பாலகார்த்தி 19, காஞ்சிவனம் 35, ஆகாஷை தேடி வருகின்றனர்.

'போக்சோ'வில் வழக்கு

கொட்டாம்பட்டி: அலங்கம்பட்டி 16 வயது சிறுமியை உறவினர் கார்த்திக் பாலியல் பலாத்காரம்செய்தார். நவ. 28ல் குழந்தை பிறந்தது. கார்த்திக் மீது 'போக்சோ' சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

8 பேர் காயம்

கொட்டாம்பட்டி: தென்காசி நாச்சிபுரம் பூ வியாபாரி கனகராஜ் 34. நேற்று முன்தினம் இரவு திருச்சியில் உறவினர் மகள் போலீஸ் பயிற்சி முடிந்தநிறைவு விழா பங்கேற்றுவிட்டு காரில் உறவினர்களடன் ஊர் திரும்பினார். கொட்டாம்பட்டி பள்ளபட்டி பஸ் ஸ்டாப் அருகே காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கனகராஜ் கழித்த போது பின்னால் திருச்சி - மதுரை லாரி மோதியதில் காரில் இருந்த செந்தில்வேல் 58, சத்யா 45, மாரியம்மாள் 42, உட்பட 8 பேர் காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர் விபத்தில் பலி

அலங்காநல்லுார்: ஆனையூர் கண்ணன் மகன்கள் விவேக்ராஜ் 24, மோகன்ராஜ்26. இருவரும் டூவீலரில்(ஹெல்மெட் அணியவில்லை) டிச.,2 காலை அலங்காநல்லுார் நோக்கி சென்றனர். விவேக்ராஜ் ஓட்டினார். பூதக்குடி பிரிவில் முன்னாள் சென்ற அரசு துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர் 50,(ஹெல்மெட் அணிந்திருந்தார்) டூவீலர்மீது மோதியதில் மூவரும் காயமடைந்தனர். விவேக்ராஜ் நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X