மதுரை : புரெவி புயலால் மழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றும், முன்தினமும்சாரலும், துாறலுமாக மதுரையில் தொடர் மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் கள்ளந்திரி, தனியாமங்கலத்தில் தலா 26 மி.மீ. சோழவந்தான் 24, மேலுார் 20, சிட்டம்பட்டி 18.6, புலிப்பட்டி 16.5, மதுரை வடக்கு 15.2, இடையபட்டி 15, உசிலம்பட்டியில் 13.2 மி.மீ மழை பதிவானது. மொத்த சராசரி 13.27 மி.மீ.பெரியாறு அணை நீர்மட்டம் 124.8 அடி, நீர் இருப்பு 3,578 மில்லியன் கனஅடி. வினாடிக்கு நீர்வரத்து 414, நீர் வெளியேற்றம் 1335 கனஅடி. வைகை அணையின் நீர்மட்டம் 57.51 அடி, நீர் இருப்பு 3,143 மில்லியன் கனஅடி. நீர்வரத்து வினாடிக்கு 1338, நீர் வெளியேற்றம் கனஅடி 2069.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE