திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நெல், வாழை, மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.9 லட்சம் வட்டியில்லா கடன் மற்றும் 10 பேருக்கு குறைந்த வட்டியில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 110 ஆடுகள் வழங்கப்பட்டன.
தலைவர் முருகன் தலைமை வகித்தார். செயலாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., கூட்டுறவு விரிவாக்க அலுவலர் ஜெயப்பிரகாஷ், சரக மேற்பார்வையாளர் மணிவண்ணன் வழங்கினர்.எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள்பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE