திருநகர் : தமிழ்நாடு யோகாசன சங்கம் சார்பில் 33வது மாநில யோகா சாம்பியன் போட்டிகள் மதுரையில் துவங்கியது.மாநில தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். அகில இந்திய யோகா சம்மேளன தலைவர் அசோக் அகர்வால், ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை ராஜா துவக்கி வைத்தனர்.
ஆன்லைனில் நடக்கும் இப்போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று வருகின்றனர். 8-10, 10-12, 12-14, 14-16, 16-18, 18-21, 21-25, 25-35, 35-45 வயது, மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவுகளில் இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொருவரும் 10 ஆசனங்களும், ஒவ்வொரு ஆசனத்தில் 20 நொடிகளும் இருக்க வேண்டும். முதல் 3 இடங்கள் பெறுபவர்கள் தேசிய போட்டிக்கு தகுதி பெறுவர்.
இப்போட்டிகளை தொழில்நுட்ப வல்லுநர் தினேஷ்பாண்டியன் தலைமையில் 18 பொறியாளர்கள் கண்காணிக்கின்றனர். வெற்றியாளர்களை தேர்வு செய்யும் பணியில் 40 நடுவர்கள் ஈடுபட்டுள்ளனர் என பொதுச்செயலாளர் யோகி ராமலிங்கம் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE