விருதையில் தொடர் மழைஇயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : டிச 04, 2020
Share
Advertisement
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் பெய்யும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது.புரெவி புயல், நாளை காலை கரையை கடக்கும் நிலையில், விருத்தாசலம் பகுதியில் நேற்று முன் தினம் இரவு முதல், தொடர் மழை பெய்கிறது. அரசு, தனியார் அலுவலக ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை. நகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.சின்னவடவாடியில் இரு வீடுகள்,

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் பெய்யும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது.புரெவி புயல், நாளை காலை கரையை கடக்கும் நிலையில், விருத்தாசலம் பகுதியில் நேற்று முன் தினம் இரவு முதல், தொடர் மழை பெய்கிறது. அரசு, தனியார் அலுவலக ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை. நகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.சின்னவடவாடியில் இரு வீடுகள், பாலக்கொல்லை, குப்பநத்தம், புதுக்கூரைப்பேட்டை ஊராட்சிகளில் தலா 1 வீடு உட்பட 5 கூரை வீடுகள் சேதமடைந்தன. 2 ஆடுகள், 1 மாடு உயிரிழந்தன.விருத்தாசலம் தாலுகாவில் வீடுகள் சேதம், கால்நடைகள் இறப்பு, நீரில் மூழ்கிய நெற்பயிர்கள், குறித்து தாசில்தார் சிவக்குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் விசாரிக்கின்றனர்.மார்க்கெட் கமிட்டி வெறிச்:தொடர் மழை காரணமாக மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று விளைபொருட்கள் வரத்து தடைபட்டது. 50 மூட்டை நெல் மட்டும் விற்பனைக்கு வந்திருந்தன. நேற்று முன்தினம் 3,000 மூட்டை வந்த நிலையில், புரெவி புயலால் மீண்டும் வரத்து குறைந்தது. கமிட்டி வளாகம், விவசாயிகளின்றி வெறிச்சோடியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X