; கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், விருத்தாசலத்தில் நேற்று நடந்தது.தலைமை பேச்சாளர் முருகுமணி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராமு வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் அருண்மொழித் தேவன், எம்.எல்.ஏ.,க்கள் கலைச்செல்வன், முருகுமாறன் பேசினர்.தேர்தல் மண்டல பொறுப்பாளர், அமைச்சர் சண்முகம் ஆலோசனை வழங்கி பேசியதாவது:ஜெ., நம்மோடு இல்லை; நாம் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்தால் தான், வெற்றி பெற முடியும். சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.,வில் உயர்ந்த இடத்திற்கு வர முடியும். எனவே, இளைஞர்கள் உங்களை நீங்களாகவே வளர்த்துக் கொள்ளுங்கள். தகவல் தெரிவித்து கூட்டம் போடுங்கள், கொடியேற்றுங்கள். நல்ல போட்டி இருக்கலாம்; பொறாமை இருக்கக் கூடாது.பீகார் தேர்தல் இந்தியா முழுதும் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், ஆட்சியில் உள்ளவர்களுக்கும் பாடம்.கடந்த தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் ஒரு பூத்தில், 101 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒரு எம்.எல்.ஏ.,வை இழந்தோம். அலட்சியமாக, அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்தால், பலனை நாம் அனுபவிக்கலாம்'. இவ்வாறு, அமைச்சர் சண்முகம் பேசினார்.நகர செயலாளர் சந்திரகுமார் நன்றி கூறினார்.
ஜெ., பேரவை மாவட்ட செயலர் ரவிச்சந்திரன், மாவட்ட பால்வள சேர்மன் பச்சமுத்து, மாவட்ட சேர்மன் திருமாறன், ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, பாலதண்டாயுதம், தம்பிதுரை, சின்ன ரகுராம், ராஜேந்திரன், முத்துபிள்ளை, பேரூர் செயலாளர் ஜமால்முகமது, ஐ.டி., அணி கோவை மண்டல துணை செயலாளர் அருண், பாசறை மாவட்டச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய சேர்மன் செல்லதுரை, அரசு வழக்கறிஞர் விஜயகுமார், முன்னாள் நகராட்சி சேர்மன் அருளழகன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மணிவண்ணன், நகர மாணவரணி செயலாளர் செல்வகணபதி, கூட்டுறவு சங்க இயக்குனர் அருளாகரன், நிர்வாகிகள் மணிமாறன், ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாஸ்கரன், பெரியசாமி, நகர துணை செயலாளர் சத்யாசெல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE