கம்மாபுரம்; வீட்டிற்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றிட வலியுறுத்தி, கிராம மக்கள், கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால், பரபரப்பு நிலவியது.கம்மாபுரம் ஊராட்சி முருகன் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு, மழைநீர் வெளியேற வடிகால் வசதியில்லை. நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையினால், அப்பகுதியில் வீட்டிற்குள் மழைநீர் சூழ்ந்தது. ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், காலை 8:30 மணியளவில், ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஊராட்சித் தலைவர் வளர்மதி ராஜசேகரன், கம்மாபுரம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் வடிகால் வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்து, உடன் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE