மப்பேடு; மப்பேடு அருகே, நெடுஞ்சாலையில் விழுந்த மரங்களை அகற்றுவதில் யார் என்ற போட்டியால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது, மப்பேடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையோரம் நிவர் புயலால், மூன்று தினங்களுக்கு முன், சாலையோர மரம் ஒன்று வேரோடு பெயர்ந்து விழுந்தது.இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த மரத்தை அகற்றுவதில், நெடுஞ்சாலைத் துறையினருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் இடையே, கடும் சச்சரவு நிலவி வந்தது.இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை கேட்டு கொண்டதற்கிணங்க, நேற்று மதியம், 3:00 மணியளவில், ஒன்றியக் குழு உறுப்பினர் மூலம், சாலையோரம் விழுந்த மரம் அகற்றப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெருமூச்சு விட்டபடி சென்றனர்.வரும் காலங்களிலாவது சாலையில் விழுந்த மரத்தை வாகன ஓட்டிகள் நலன் கருதி, ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்ற, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE