சங்கடஹர சதுர்த்தி விழா
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, அண்ணாதுரை சிலை அருகில் உள்ள செல்வ வினாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி விழாவையொட்டி, சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிதர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கடல், சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல், திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதி, பஸ் நிலையம் அருகே உள்ள புற்றுக்கோவில் விநாயகர் சன்னதி, தாராட்சி பரதீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி, சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகர் சன்னதி ஆகியவற்றில் நேற்று, சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது.இன்று கும்பாபிஷேகம்
கடம்பத்துார்: கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட பெரிய தெருவில் அமைந்துள்ளது மல்லிகார்ஜூனர் சிவன் கோவில். இந்த கோவிலில், இன்று காலை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இன்று மாலை, 5:00 மணிக்கு, சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE