அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: உதயநிதிக்கு பாடம் எடுக்கணும்!

Updated : டிச 04, 2020 | Added : டிச 04, 2020 | கருத்துகள் (72)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எம்.எல்.ராகவன், பணிநிறைவு பெற்ற இயற்பியல் பேராசிரியர், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க-., இளைஞர் அணி செயலர் உதயநிதியின் பொறுப்பற்ற, மிரட்டலான பேச்சு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த உதயநிதி, கட்சி
DMK, Udhayanidhi, Udhayanidhi Stalin, உதயநிதி


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


எம்.எல்.ராகவன், பணிநிறைவு பெற்ற இயற்பியல் பேராசிரியர், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க-., இளைஞர் அணி செயலர் உதயநிதியின் பொறுப்பற்ற, மிரட்டலான பேச்சு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த உதயநிதி, கட்சி நிர்வாகிகளிடம் பேசுகையில், 'அவரு தான், ஸ்பெஷல் டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ்; பேரெல்லாம் ஞாபகம் வச்சிருப்போம். இன்னும் ஐந்து மாதம் தான் இருக்கு... எங்களுக்கு தெரியாத காவல்துறையா...' என, மிரட்டல் விடுத்தார்.

இது, போலீசாரிடம் மட்டுமின்றி, அனைத்து அரசு துறைகளின் அதிகாரிகள் மத்தியிலும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மீது அக்கறை உள்ள, அரசியல் கட்சியாக, தி.மு.க.,வினர் என்ன செய்திருக்க வேண்டும்?

நம் மாநிலத்திற்கு சேர வேண்டிய, ஜி.எஸ்.டி., வருவாய் நிலுவைத் தொகையை, வெகுகாலமாக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது; அதற்காக, தி.மு.க., போராடியிருக்க வேண்டும்.திருச்சி - -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர்களைப் பற்றிய அறிவிப்பு, தொலைவு குறித்த விபரம் அனைத்தும், ஹிந்தியில் மட்டுமே உள்ளது. இந்த, கட்டாய ஹிந்தித் திணிப்பை அழித்து, போராடியிருக்க வேண்டும்.


latest tamil newsமத்திய அரசு, ஹிந்தி தெரியாத அரசு அலுவலர்களுக்கு, ஹிந்தியில் கடிதம் அனுப்புவது எல்லாமே, மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளை உசுப்பேற்றும் செயல் தானே... இவற்றை எதிர்த்து, உதயநிதி களமிறங்கி இருக்க வேண்டும். இவற்றில் எல்லாம் அக்கறை காட்டாமல், அரசு அதிகாரிகளை மிரட்டுவது, அநாகரிகம் மட்டுமல்ல; அத்துமீறலும் ஆகும்.

உதயநிதியின் இந்த பொறுப்பற்ற பேச்சால், கட்சி சார்பற்ற மக்களின் ஆதரவை, தி.மு.க., இழக்க நேரிடும். தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் உள்ள மக்களை, அரவணைத்துக் கொள்ளும் ராஜதந்திரம், தி.மு.க.,வுக்கு கைவரவில்லை. வேலியில் ஓடும் ஓணானைத் தேடிப்பிடித்து, வேட்டிக்குள் விடுவது போல, உதயநிதி நடந்து கொள்ளக் கூடாது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மூத்த தலைவர்கள் பலரை ஓரம்கட்டி, அரசியல் அனுபவம் இல்லாத, இளையவரான, தன் மகன் உதயநிதிக்கு, கட்சியில் அதிக முக்கியத்துவம் தந்ததால், இப்படியான பேச்சு வெளிவருகிறது.மக்களையும், அதிகாரிகளையும் மிரட்டுவது, இன்று செல்லுபடி ஆகாது. நம்பிக்கை தரக்கூடிய, அர்த்தமுள்ள, ஆதாரபூர்வமான பேச்சு திறன் தான், அரசியல்வாதிக்கு முக்கியம். 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' குறித்து, உதயநிதிக்கு யாராவது பாடம் நடத்தினால் பரவாயில்லை.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
04-டிச-202023:26:19 IST Report Abuse
Rajan தீயமுக அல்லைக்கைஸ் பெயர் இல்லை ஏன்?
Rate this:
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
04-டிச-202021:15:44 IST Report Abuse
Raghuraman Narayanan ஹிந்தி திணிப்பு என்கிற போலியான விமர்சனங்களை இனியும் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள். அதே போல் கடவுள் எதிர்ப்பு நாத்திகம் போன்றவைகளையும் மக்கள் புறக்கணிப்பார்கள். திமுக இளைஞர் அணி தலைவருக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டும் நாங்கள் பாடம் புகட்டுவோம்.
Rate this:
Cancel
Truth Triumph - Coimbatore,இந்தியா
04-டிச-202020:35:55 IST Report Abuse
Truth Triumph இப்படிப்பட்ட ஆளை பேச விட்டு ரசிக்கும் கூட்டம் இருக்கும் போது இந்த ஆளுக்கு அறிவுரை சொல்லி என்ன பலன் ... மேலும் இந்தி பெயர்பலகைகள் இருந்தால் அக்கறை உள்ளவர்கள் அதன் அருகில் தமிழில் பெயர் பலகை வைத்து பாடம் கற்பிக்க அறிவுறுத்துங்கள் ... வரி ஏய்ப்பு செய்ய ஊக்குவிக்கும் வகையில் ஒற்றைமுறை வரி செலுத்தும் முறையை குறை கூறுவது ... இதனால் மக்களுக்கு பாதிப்பே தவிர வேறென்ன ... எதற்கெடுத்தாலும் போராட்டத்தை ஊக்குவிக்கும் அறிவுரை ஊழலை தடுக்க ஏன் வருவதில்லை ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X