கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டியில் இருந்து, ஈகுவார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள நாகராஜகண்டிகை ஓடை மீது உள்ள தரைப்பாலத்தில், மூன்று அடி உயரத்திற்கு மழை வெள்ளம் பாய்கிறது.நேற்று, அந்த தரைப்பாலம் வழியாக, அட்டை பெட்டிகளை ஏற்றி சென்ற மினி லாரி ஒன்று, சாலை தெரியாமல், பள்ளத்தில் இறங்கியதால், வெள்ளத்தில் அடித்து சென்றது. சற்று தொலைவில் இருந்த பள்ளத்தில், மினி லாரி சிக்கி மூழ்கியது.அதில் பயணித்த, செஞ்சி பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் ஆனந்தன், 55, திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த அஸ்கர், 18, ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிண்டு, 23, சப்ஜீவ், 22, சிவா, 22, ஆகியோர், சற்று வெளியே தெரிந்த மினி லாரியின் மேல் பரப்பில், பாதுகாப்பாக அமர்ந்துக் கொண்டனர்.தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், கயிற்றை வீசி ஒவ்வொருவரையும் பத்திரமாக மீட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE