பொது செய்தி

தமிழ்நாடு

தொண்டை மண்டல ஆதீனம் உடல் அடக்கம்

Added : டிச 04, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம், ஞானப்பிரகாச பரமாச்சாரியார் உடல், நேற்று மதியம், மடத்தின் வளாகத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது.காஞ்சிபுரத்தில், செயல்பட்டு வரும் தொண்டை மண்டல ஆதீன மடத்தின், 232வது மடாதிபதியாக, ஞானப்பிரகாச பரமாச்சாரியார், 87, இருந்தார்.கடந்த மாதம், 19ம் தேதி, அவரது அறையில் கால் தடுமாறி விழுந்து காயமடைந்த அவர், சென்னை தனியார் மருத்துவமனையில்

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம், ஞானப்பிரகாச பரமாச்சாரியார் உடல், நேற்று மதியம், மடத்தின் வளாகத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது.காஞ்சிபுரத்தில், செயல்பட்டு வரும் தொண்டை மண்டல ஆதீன மடத்தின், 232வது மடாதிபதியாக, ஞானப்பிரகாச பரமாச்சாரியார், 87, இருந்தார்.கடந்த மாதம், 19ம் தேதி, அவரது அறையில் கால் தடுமாறி விழுந்து காயமடைந்த அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மதியம் இறந்தார். இதையடுத்து, அவரது உடல், காஞ்சிபுரம் மடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, ஆகம முறைப்படி, தர்மபுரம் மடத்தின் சார்பில், தம்பிரான் முன்னிலையில், நேற்று மதியம், 2:000 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.மடத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பகுதியில் உள்ள மடத்தின் விசுவாசிகள் பலர், காஞ்சிபுரம் வந்தனர்.இது குறித்து, ஆலோசனைக்குழு உறுப்பினர் குப்புசாமி கூறுகையில், ''புதிய மடாதிபதியை, மடத்தின் சீடர்கள் மற்றும் ஆலோசனை குழு, அறநிலையத் துறை அதிகாரிகள் சேர்ந்து, தேர்வு செய்வர். ஞானப்பிரகாச பரமாச்சாரியாருக்கு சேவை செய்துவந்த நித்யானந்தாவின் சீடர்கள், இனி வெளியில் சென்றுவிடுவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X