போலீஸ் டைரி

Added : டிச 04, 2020
Share
Advertisement
போலீஸ் பிடியில் தப்பியோர் கைது செம்பியம்: பெரம்பூர், பி.பி.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினகுமார், 60. இவரது மனைவி சுபாஷினி, 54. கடந்த, 30ம் தேதி, தம்பதி நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, டூ - வீலரில் வந்த மூவர், சுபாஷினியின், 7 சவரன் நகையை பறித்து தப்பினர். இதுதொடர்பாக, செம்பியம் போலீசார், புளியந்தோப்பைச் சேர்ந்த அஜித்குமார், 19, வியாசர்பாடியைச் சேர்ந்த ஆகாஷ், 20, மற்றும்

போலீஸ் பிடியில் தப்பியோர் கைது செம்பியம்: பெரம்பூர், பி.பி.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினகுமார், 60. இவரது மனைவி சுபாஷினி, 54. கடந்த, 30ம் தேதி, தம்பதி நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, டூ - வீலரில் வந்த மூவர், சுபாஷினியின், 7 சவரன் நகையை பறித்து தப்பினர். இதுதொடர்பாக, செம்பியம் போலீசார், புளியந்தோப்பைச் சேர்ந்த அஜித்குமார், 19, வியாசர்பாடியைச் சேர்ந்த ஆகாஷ், 20, மற்றும் ராஜேஷ், 20, ஆகியோரை கைது செய்தனர்; நகை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையின்போது, நேற்று முன்தினம் இரவு, அஜித்குமார், ஆகாஷ் ஆகியோர் தப்பினர். இந்நிலையில், வியாசர்பாடி, ஜீவா பகுதியில் பதுங்கி இருந்தவர்களை, நேற்று போலீசார் கைது செய்தனர்.ஏரியில் மூழ்கி முதியவர் பலிபுழல்: மடிப்பாக்கம், ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் புண்ணியகோட்டி, 74; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். புற்றுநோயால், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று மதியம், 12:30 மணி அளவில், அவரது சடலம், மாதவரம், ரெட்டேரியில் மிதந்தது. தகவல் அறிந்த புழல் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், முதியவரின் சடலத்தை மீட்டனர். விசாரணையில், உடல்நலம் பாதிப்பால் ஏற்பட்ட, மன உளைச்சல் காரணமாக, தற்கொலை செய்தது தெரியவந்தது.கண்காணிப்பு கேமரா உடைப்புபுளியந்தோப்பு: புளியந்தோப்பு, சாஸ்திரி நகர், இரண்டாவது தெருவில், ஐந்து மாதங்களுக்கு முன், பொதுமக்கள் பங்களிப்புடன், 15 ஆயிரம் ரூபாய் செலவில், இரண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டன. அதில் ஒன்று, நவ., 4ல் மாயமானது. புளியந்தோப்பு போலீசார் விசாரித்தனர். இதில், 4ம் தேதி அதிகாலை, போதை ஆசாமி ஒருவன், கண்காணிப்பு கேமராவை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும், அவர் புளியந்தோப்பு, நரசிம்மன் நகரைச் சேர்ந்த பிரதீப், 26, என்பதும், 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. போலீசார் பிரதீப்பை கைது செய்தனர்.ஆட்டோ ஓட்டுனர் தற்கொலைபுழல்: புழல் அடுத்த விநாயகபுரம், திரு.வி.க., தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ், 29; ஆட்டோ ஓட்டுனர். இவர், சுயதொழில் தேவைக்காக, தனக்கு தெரிந்தோரிடம், கடன் வாங்கியிருந்தார். போதிய வருவாய் இன்றி, கடன் செலுத்த முடியாமல் தவித்தார். இதனால் விரக்தியடைந்தவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X