பொது செய்தி

இந்தியா

"அடடா... யோக்கியன் வரான்... சொம்பை எடுத்து உள்ளே வை..."

Updated : டிச 04, 2020 | Added : டிச 04, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
தி.மு.க.,வினர், 10 ஆண்டுகளாக பதவியில் இல்லாமல், காய்ந்து போய், மக்களின் மீது பாய்வதற்கு தயாராகி வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால், ஊருக்கு ஊர் எதையெல்லாம் அபகரிப்பர்; சாதாரண மக்களின் நிம்மதி, எப்படியெல்லாம் குலைந்து போகும் என்பதை நினைக்கும் போதே, நெஞ்சம் பதறுகிறது.- அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்'அடடா... யோக்கியன் வரான்... சொம்பை எடுத்து உள்ளே வை'
"அடடா... யோக்கியன் வரான்... சொம்பை எடுத்து உள்ளே வை..."

தி.மு.க.,வினர், 10 ஆண்டுகளாக பதவியில் இல்லாமல், காய்ந்து போய், மக்களின் மீது பாய்வதற்கு தயாராகி வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால், ஊருக்கு ஊர் எதையெல்லாம் அபகரிப்பர்; சாதாரண மக்களின் நிம்மதி, எப்படியெல்லாம் குலைந்து போகும் என்பதை நினைக்கும் போதே, நெஞ்சம் பதறுகிறது.
- அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்


'அடடா... யோக்கியன் வரான்... சொம்பை எடுத்து உள்ளே வை' என்பது போல, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை.



கொரோனா காலத்தில், சிகிச்சை அளித்ததாக பொய் கணக்கு எழுதி, ஊழல் செய்துள்ளனர். முக கவசம், பிளீச்சிங் பவுடர் வாங்கியது வரை ஊழல் நடந்துள்ளது. தன்னை விவசாயி எனக் கூறிக்கொண்டு விவசாயிகளை, முதல்வர் ஏமாற்றி வருகிறார். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
- தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி


'தங்கள் மீதான, '2ஜி' ஊழல் வழக்கு இன்னும் முடியவில்லை. மேல்முறையீட்டில் நிலுவையில் உள்ளதை நினைவில் கொள்க' எனக் கூற தோன்றும் வகையில், தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி பேச்சு.



இந்தியாவில் மிக எளிமையான முதல்வர், நம் முதல்வர் தான். யாரும் எளிதில் சந்திக்கலாம். இதே முதல்வர் நீடிக்க வேண்டும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நகைச்சுவை பாத்திரமாக திகழ்கிறார். என்ன பேசுகிறோம் என்பதை மறந்து பேசுகிறார். நேற்று பேசியதை, இன்று மறந்து விடுகிறார்.
- துணை சபாநாயகர் ஜெயராமன்


'இதுக்கு முன்னாடி, யாராலயும் நெருங்க முடியாத முதல்வரா இருந்த ஜெயலலிதாவை, மறைமுகமா குறை சொல்கிறாரோ' என, சந்தேகப்பட தோன்றும் வகையில், துணை சபாநாயகர் ஜெயராமன் பேச்சு.



தி.மு.க.,வில் உருவாகும் பூகம்பம் வலுப்பெறுமா, வலுபெறாதா என தெரியவில்லை. அழகிரி புயலை எதிர்கொள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அழகிரி புயல், தி.மு.க.,வை தாக்கும்.
- அமைச்சர் உதயகுமார்


latest tamil news





'போற போக்கை பார்த்தா, 'புயல் வேகத்துல நாலு இட்லி கொண்டு வாங்க' என, வீட்டில் கூட கேட்பாரோ' என, எண்ண தோன்றும் வகையில், புயல் மீட்பு பணிகளில் மூழ்கி, அதையே உவமானமாக பேசும், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி.



இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவின் உள்விவகாரங்களில், மற்ற நாடுகளின் தலைவர்களின் எந்தவொரு தலையீடும், கருத்துகளும் தேவையில்லை. இந்தியா, தன் சொந்த உள்நாட்டு விவகாரங்களை கையாளும் திறன் படைத்தது.
- ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சாதா


'சபாஷ்... பா.ஜ., அரசை தீவிரமாக எதிர்க்கும் கட்சியாக நீங்கள் இருந்தாலும், நமக்குள், ஆயிரம் கருத்து பேதங்கள் இருக்கலாம்... அதில் வெளிநாட்டினரை குளிர்காய விடக் கூடாது' என்ற உங்கள் தேசபக்திக்கு, சல்யூட் அடிக்கலாம்' என்பது போல, ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சாதா பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
04-டிச-202022:40:18 IST Report Abuse
bal எப்படி மக்கள் கனி மற்றும் ராசாவை பார்க்க செல்கின்றனர்...அதே போல் எப்படி தினகரனுக்கு கூட்டம் வருகிறது...மக்களுக்கு புத்தி இல்லையா.
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
04-டிச-202017:58:59 IST Report Abuse
ANTONYRAJ ஊழலைப் பற்றி பேச கனிமொழிக்கு கொஞ்சம் கூட அருகதை இல்லை.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-டிச-202017:52:07 IST Report Abuse
J.V. Iyer கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அப்படி பேசாவிட்டால் அவர் அரசு கவிழ்த்துவிடும். என்ன செய்வது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X