பொது செய்தி

தமிழ்நாடு

வழித்தடம் ஆக்கிரமிப்பு; பஞ்., தலைவி மீது புகார்

Added : டிச 04, 2020
Share
Advertisement
ஈரோடு: வழித்தடத்தை மறித்து, குடிசை போட்ட அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் மீது, நடவடிக்கை கோரி, ஈரோடு எஸ்.பி.,யிடம், பெண் மனு அளித்தார். திங்களூர், போலநாயக்கன்பாளையம், தெற்குபாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி மனைவி பாப்பாள், 55; கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் ஈரோடு எஸ்.பி., தங்கதுரையிடம், இவர் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கிறேன்.

ஈரோடு: வழித்தடத்தை மறித்து, குடிசை போட்ட அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் மீது, நடவடிக்கை கோரி, ஈரோடு எஸ்.பி.,யிடம், பெண் மனு அளித்தார். திங்களூர், போலநாயக்கன்பாளையம், தெற்குபாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி மனைவி பாப்பாள், 55; கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் ஈரோடு எஸ்.பி., தங்கதுரையிடம், இவர் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கிறேன். அருகில் உள்ள நிலத்தை வழித்தடமாக, 35 ஆண்டாக பயன்படுத்தி வந்தேன். தற்போது அ.தி.மு.க., ஊராட்சி தலைவி சரஸ்வதி, அவரது கணவர் சோமசுந்தரம், அவரது தம்பி இளங்கோ ஆகியோர், வழித்தடத்தை மறித்து குடிசை போட்டுள்ளனர். எனக்கு எதிராக பல்வேறு பிரச்னைகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது, உரிய நடவடிககை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X