சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், திமுக மாநில மகளிரணி செயலாளரும், எம்.பி.,யுமான கனிமொழியிடம், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விவசாயிகளால் நடத்தப்படும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், இடைத்தரகரின்றி பூக்களை விற்பனை செய்கிறோம். வாடகை இடத்தில் செயல்படுவதால், அரசுக்கு சொந்தமான இடத்தில் குத்தகைக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும். அதிகமாக மலர்கள் விளையும் சீசனில், அதை பயனுள்ள வகையில் பயன்படுத்த, வாசனை திரவிய ஆலையை அமைத்து கொடுக்க வேண்டும். உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை, மானிய விலையில் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE