மொடக்குறிச்சி: ஆட்சியம்மன் கோவிலில் அம்மன் ஊஞ்சல் ஆடியதாக கூறப்படும் வீடியோ, பக்தர்கள் மத்தியில் பரவி வருகிறது. கொடுமுடி, ஏமகண்டனூரில் பிரசித்தி பெற்ற ஆட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு எமதர்மராஜா, சித்திரகுப்தர், விசித்திர குப்தருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இதனால் அனைத்து நாட்களிலும், பக்தர்கள் தரிசனத்துக்கு வருகின்றனர். கோவிலில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமராக்களை, நிர்வாகிகள் கண்காணிப்பது வழக்கம். கடந்த, 30ம் தேதி பவுர்ணமி நாளில் ஆய்வு செய்தனர். அன்றிரவு பதிவான காட்சியில், ஆட்சியம்மன் சன்னதி கருவறையிலிருந்து, நிலவு போல் ஒரு ஒளி உலா வருவதும், மீண்டும் அம்மனுக்கு நேராக இருக்கும் ஊஞ்சலில் நின்று ஆடுவதும் போல் பதிவாகியிருந்தது. தற்போது இந்த காட்சி, வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE