பனமரத்துப்பட்டி: உலக மண் தின விழாவில், விவசாயிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண் அறிவியல் நிலையத்தில், டிச., 5ல்(நாளை), உலக மண் வள தின விழா நடக்க உள்ளது. அதில், மண்வளம் பற்றிய தொழில்நுட்பம், மண் மாதிரி சேகரித்தல், மண் வள அட்டை வழங்குதல், தொழில்நுட்ப கையேடு வெளியிடுதல் நிகழ்ச்சி நடக்கும். மண் பரிசோதனை, கார அமில நிலை, உவர் நிலை, கரிம கார்பன் ஆகியவை இலவசமாக பரிசோதனை செய்யப்படும். இதற்கு, விவசாயிகள் உலர்ந்த மண் மாதிரி எடுத்துவந்து பயன்பெறலாம். விபரம் பெற, 0427 -2422550, 9677551797, 9095513102 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE