பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டத்தில், வானிலை அடிப்படையில் வேளாண் ஆலோசனை குறித்து, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண் பல்கலை, இந்திய வானிலை துறை, இந்திய வானிலை வெப்பமண்டல நிறுவனத்தால், பரிந்துரைக்கப்படும், 'செயலி'கள் மூலம், வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனை, வானிலை நிலவரம், இடி, மின்னல் பாதுகாப்பு உத்தி குறித்து, தங்கள் மொபைல் போன் மூலம், உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். அதற்கு, 'கூகுள் ப்ளே ஸ்டோர்' மூலம், https://play.google.com/store/apps/details?id=ta.tnauacrc.aas; https://play.google.com/store/apps/details?id=com.aas.meghdootDAMINI; https://play.google.com/store/apps/details?id=com.lightening.live.damini; https://play.google.com/store/apps/details?id=com.imd.masuam என்ற 'லிங்க்'கை பயன்படுத்தி, பதிவிறக்கி, செயலியை உபயோகித்து பயன்பெறலாம். விபரத்துக்கு, 0427 2422550, 9095513102, 9677551797 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE