வீரபாண்டி: உடற்பயிற்சி கூடம் பூட்டியே வைத்துள்ளதால், உபகரணங்கள் வீணாகி வருகின்றன. ஆட்டையாம்பட்டி, சென்னகிரி ஊராட்சி அலுவலகம் அருகே, பிச்சம்பாளையம் சாலையில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், 'அம்மா' சிறுவர் விளையாட்டு பூங்கா, பூப்பந்து மைதானம், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. தொடர்ந்து, இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், நவீன கருவிகளுடன் உடற்பயிற்சி கூடம் கட்டி முடித்து, கடந்தாண்டு பிப்ரவரியில் திறக்கப்பட்டது. பூங்கா, காலை, மாலையில் திறக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனாவால், எட்டு மாதங்களாக பூட்டி வைத்துள்ளனர். ஆனால், உடற்பயிற்சி கூடம் பயிற்சியாளர் நியமிக்கப்படாததால், இன்றுவரை திறக்கப்படவில்லை. தமிழக அரசு ஊரடங்கில் தளர்வு அறிவித்து, பாதுகாப்பு வழிமுறைகளுடன் நீச்சல் குளம், பூங்கா, உடற்பயிற்சி கூடம் திறக்க அனுமதி அளித்துள்ளது. அப்படி இருந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், உடற்பயிற்சி கூட உபகரணங்கள் வீணாவதோடு, இளைஞர்களுக்கு பயன்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE