அரூர்: மொல்லன் ஒட்டு தடுப்பணை கட்டும் திட்டத்தை, உடனடியாக துவங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ளது சித்தேரி மலை. கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில் இருந்து, உருவாகும் வரட்டாறு, வள்ளிமதுரை, கௌாப்பாறை வழியாக, அரூரில் உள்ள வாணியாற்றில் சேர்கிறது. இந்நிலையில், வரட்டாற்றின் குறுக்கே, மொல்லன் ஒட்டு தடுப்பணை கட்டும் திட்டத்தை துவங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து. பா.ஜ., மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் குழந்தை ரவி கூறியதாவது: கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், மொல்லன் ஒட்டு என்ற இடத்தில், தடுப்பணை கட்டப்பட்டது. வரட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், தடுப்பணை சேதமானது. அதன்பின், தடுப்பணை கட்டப்படவில்லை. தடுப்பணை கட்டப்பட்டால், 1,500 ஏக்கர் பாசன வசதி பெறும். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, கடந்தாண்டு, 1.86 கோடி ரூபாய் மதிப்பில், பொதுப்பணித்துறை சார்பில், தடுப்பணை கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு அரூர் வந்த முதல்வர் பழனிசாமியும், தடுப்பணை கட்டப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், தடுப்பணை கட்டுவதற்கான பணி துவங்கவில்லை. எனவே, மொல்லன் ஒட்டு தடுப்பணை கட்டும் திட்டத்தை, உடனடியாக துவங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE