தர்மபுரி: மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற, 12 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில், பென்னாகரம், பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக, நேற்று தர்மபுரி, அரூர் மதுவிலக்கு போலீசார், பென்னாகரம், பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். இதில், மதுபானங்களை பதுக்கி விற்ற பென்னாகரத்தை சேர்ந்த, ஆறு பேர், அரூரை சேர்ந்த நான்கு பேர், பாலக்கோட்டை சேர்ந்த இருவர், என, மொத்தம், 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 250 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE