சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல்: மாஜி எம்.எல்.ஏ.,வை பிடிக்க தனிப்படை அமைப்பு

Added : டிச 04, 2020
Share
Advertisement
அரூர்: அ.தி.மு.க., நிர்வாகியை தாக்கிய வழக்கில், அ.ம.மு.க.,வை சேர்ந்த மாஜி எம்.எல்.ஏ., முருகனை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த தம்பிச்செட்டிபட்டியை சேர்ந்த ஆறுமுகம், 62, அ.தி.மு.க., கிளை செயலாளர்; நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள, ஜூஸ் பேக்டரி சுற்றுச் சுவரில் விளம்பரம் எழுதுவதாக தொடர்பாக அவருக்கும், அ.ம.மு.க.,வினருக்கும் இடையே

அரூர்: அ.தி.மு.க., நிர்வாகியை தாக்கிய வழக்கில், அ.ம.மு.க.,வை சேர்ந்த மாஜி எம்.எல்.ஏ., முருகனை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த தம்பிச்செட்டிபட்டியை சேர்ந்த ஆறுமுகம், 62, அ.தி.மு.க., கிளை செயலாளர்; நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள, ஜூஸ் பேக்டரி சுற்றுச் சுவரில் விளம்பரம் எழுதுவதாக தொடர்பாக அவருக்கும், அ.ம.மு.க.,வினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஆறுமுகத்தை, அ.ம.மு.க., அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான முருகன், கனகராஜ் இருவரும் ஆபாச வார்த்தையால் பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஆறுமுகம் அளித்த புகார்படி, முருகன், கனகராஜ், முன்னாள் சேர்மன் தென்னரசு, ஏகநாதன், சிற்றரசு, தீப்பொறி செல்வம், கமல், நரசிம்மன் ஆகிய எட்டு பேர் மீது, மொரப்பூர் போலீசார் வழக்கு பதிந்தனர். தர்மபுரி எஸ்.பி., பர்வேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு, அரூரில் முகாமிட்டார். அவரது உத்தரவுப்படி, மாஜி எம்.எல்.ஏ., முருகனை கைது செய்வதற்கு, ஏ.டி.எஸ்.பி.,குணசேகரன், மூன்று டி.எஸ்.பி.,க்கள் ஆகியோர் தலைமையில், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X