பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பத்தூரில் மருத்துவ கல்லூரி: அமைச்சர் வீரமணி

Added : டிச 04, 2020
Share
Advertisement
திருப்பத்தூர்: ''திருப்பத்தூர் மாவட்டத்தில், புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்,'' என அமைச்சர் வீரமணி கூறினார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா, திருப்பத்தூரில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தலைமை வகித்தார். 436 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 15.36 கோடி ரூபாய் கடனுதவியை, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணி வழங்கினார். பின்னர்,

திருப்பத்தூர்: ''திருப்பத்தூர் மாவட்டத்தில், புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்,'' என அமைச்சர் வீரமணி கூறினார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா, திருப்பத்தூரில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தலைமை வகித்தார். 436 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 15.36 கோடி ரூபாய் கடனுதவியை, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணி வழங்கினார். பின்னர், திருப்பத்தூர்-வாணியம்பாடி இடையே, 3,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.


அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டத்தில், புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்படும். ஜோலார்பேட்டை சட்டசபை தொகுதியில், 190 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், விரைவில் தொடங்கப்படும். படிப்படியாக, இத்திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X