தமிழ்நாடு

ராமர் பிறந்த புனர்பூசம் நட்சத்திரத்தில் ரஜினியின் அறிவிப்பு: ஆன்மிக அரசியலுக்கு அச்சாரம் என ஜோதிடர்கள் கணிப்பு

Added : டிச 04, 2020
Share
Advertisement
ராமன் பிறந்த புனர்பூச நட்சத்திர தினமான நேற்று அரசியில் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகார்ந்த, கட்சியையும், அதே நட்சத்திரத்திரத்தன்று அறிவிக்க உள்ளார். புனர்பூசம் நட்சத்திரம் ராமன் பிறந்த நட்சத்திரம். ஏற்கனவே அவர் அறிவித்த ஆன்மிக அரசியலை, கட்சியை, ராமரின் பிறந்த நட்சத்திர நாளில் அறிவிக்கிறார்.நடிகர் ரஜினிகாந்த், நேற்று மதியம், 12:16 மணிக்கு, 'ஜனவரியில் கட்சி துவங்கம்; டிச.,

ராமன் பிறந்த புனர்பூச நட்சத்திர தினமான நேற்று அரசியில் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகார்ந்த, கட்சியையும், அதே நட்சத்திரத்திரத்தன்று அறிவிக்க உள்ளார். புனர்பூசம் நட்சத்திரம் ராமன் பிறந்த நட்சத்திரம். ஏற்கனவே அவர் அறிவித்த ஆன்மிக அரசியலை, கட்சியை, ராமரின் பிறந்த நட்சத்திர நாளில் அறிவிக்கிறார்.


நடிகர் ரஜினிகாந்த், நேற்று மதியம், 12:16 மணிக்கு, 'ஜனவரியில் கட்சி துவங்கம்; டிச., 31 ம் தேதி அறிவிப்பு' என, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, பிரபல ஜோதிடர்கள் கூறியதாவது: ரஜினிகாந்த், 1950 டிச., 12ல் பிறந்ததால், அவரது பிறந்த தேதியின் கூட்டுத்தொகை, 3. அவரை வியாழன் இயக்குகிறார். 12ல் பிறந்தவர்களுக்கு வியாழன், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களில் இருந்து, 12, 1, 2 ஆகிய லக்கனங்களால் நன்மைகளை பெறுகின்றனர். இவரை ஆளும் கிரகமாக சூரியன் மற்றும் சந்திரன் இருந்தாலும், வியாழனால் ஆளப்படும் எண், 3. அதனால், அதிகமாக மக்கள் செல்வாக்கை பெறுகிறார். வியாழன் என்பது செல்வம், அறிவு, செழிப்பை குறிக்கும் கிரகம். இதை மையமாக கொண்டு, தன் பிறந்த தின கூட்டு எண், 3ல் தன் அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேற்று அவரது கூட்டு எண், 3 என்பதுடன், வியாழன் மதியம், 12.08 மணி வரை திருவாதிரை நட்சத்திரம், அதன்பின், புனர்பூசம் நட்சத்திர காலம் துவக்கம். அதையொட்டி, தன் அறிவிப்பை டுவிட்டரில் மதியம், 12:16 மணிக்கு வெளியிட்டுள்ளார். பவுர்ணமி முடிந்து மூன்றாம் நாளான நேற்று, சங்கடஹர சதுர்த்தி தினம். சங்கடங்கள் நீக்கும் சதுர்த்தி தினமாகவும், குருவார சங்கடஹர சதுர்த்தி தினமாகவும் உள்ளது. எனவே, நேற்று தன்னுடைய, 'ஆன்மிக' அரசியல் அறிவிப்பை முதலாவதாக வெளியிட்டார். அதேபோல, டிச., 31 வியாழன் அன்று கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார். அன்றும், புனர்பூசம் நட்சத்திரமாகும். டிச., 3 மற்றும் டிச., 31 இரண்டு நாட்களும் வியாழக்கிழமையாகும். ரஜினிகாந்த், ராகவேந்திரரின் தீவிர பக்தர் என்பதுடன், ரஜினியின் ஜாதகப்படி, வியாழன் பலம் சேர்ப்பதால், இந்த அறிவிப்புக்களுக்கு அன்றைய தேதியை தேர்வு செய்துள்ளார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, புனர்பூசம் நட்சத்திரம் என்பது ராமபிரானின் நட்சத்திரமாகும். 'ராம ராட்ஜியத்தை உருவாக்குவோம்' என, கூறுவோரின் ஆலோசனைப்படி, நேற்றைய அறிவிப்பும், டிச., 31ல் கட்சி அறிவிப்பும் புனர்பூசத்தில் வெளியாகிறது. 'புனர்பூசம்' என்றால், சமஸ்கிருதத்தில், 'புனர்வாசு' என்றும், 'புதிய மாற்றத்தை கொண்டு வருதல்' என்றும் பொருள் உண்டு. எனவே, அவர் சரியான நாள், நட்சத்திரம், கூட்டுத்தொகையை கொண்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாலும், வெளியிட உள்ளதாலும், நல்ல மாற்றத்தை தமிழகம் காணும். இவ்வாறு பிரபல ஜோதிடர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X