திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அ.தி.மு.க., பிரமுகரை வெட்டி கொலை செய்து, ஜாமினில் வெளியே வந்த, தி.மு.க., பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார். பழிக்கு பழியாக இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை, அ.தி.மு.க., நகர செயலாளராக இருந்தவர் கனகராஜ், 52. இவருடன் இணைந்து, திருவண்ணாமலையை சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் பங்க் பாபு, 53, ரியல் எஸ்டேட், பைனான்ஸ் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர்களுக்கு இடையே, தொழிலில் தகராறு ஏற்பட்டதில், பங்க் பாபு அவரிடமிருந்து பிரிந்து சென்று தனியாக தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 2017 ஜன., 12ல், கனகராஜ், தன் நண்பருடன் பைக்கில் சென்றபோது, முன்விரோதம் காரணமாக பங்க் பாபு மற்றும் மூன்று பேர் கொண்ட கும்பல், கனகராஜை வெட்டி கொலை செய்தது. கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர். சில மாதங்களுக்கு முன், பங்க் பாபு ஜாமினில் வெளியே வந்து, பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை, 11:30 மணிக்கு பழைய பைபாஸ் சாலையில், அவர் வீட்டின் அருகே உள்ள கடையில் டீ குடிக்க சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு, பைக்கில் தப்பி சென்றது. இதில், பங்க் பாபு சம்பவ இடத்திலேயே பலியானார். பழிக்கு பழிவாங்கும் செயலாக இந்த சம்பவம் நடந்துள்ளதா திருவண்ணாமலை போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE