நாமக்கல்: மாவட்டத்தில், நேற்று, ஒரே நாளில், 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தற்போது குறைந்து வருகிறது. நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு, ப.வேலூர், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் பாதிக்கப்பட்டனர். அதேபோல், ஈரோடு, திருச்சி, சேலம், கரூர், கோவை மற்றும் கர்நாடகா மாநிலம் சென்று வந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று, ஒரே நாளில், 27 பேர் பாதிக்கப்பட்டனர். அதன் மூலம், மாவட்டத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 10 ஆயிரத்து, 505 ஆக அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE