நாமக்கல்: நாமக்கல்லில், வரும் 12ல் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதுகுறித்து, மாவட்ட முதன்மை நீதிபதி தனசேகரன் விடுத்துள்ள அறிக்கை: தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிவுரைப்படி, நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வரும், 12 ல் மக்கள் நீதிமன்றம், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடக்கிறது. மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகளானது நடைபெறும். சாலை விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு வழக்கு, மின்சார பயன்பாடு, வீட்டு வரி, குடிநீர் வரி, ஓய்வூதியம், ரிட் மனுக்கள், செக் மோசடி, திருமண விலக்கு தவிர்த்த குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் நலன், இழப்பீடு வழக்குகள், கல்விக் கடன் வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வழக்காடுபவர்கள் நேரடியாக பங்கேற்று, சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இழப்பீடு தொகை, பிற பிரச்னைகள் இருதரப்பினர் சம்மதத்துடன் விரைவில் தீர்க்கவும் மக்கள் நீதிமன்றங்கள் வழிவகை செய்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE