பொது செய்தி

தமிழ்நாடு

மரவள்ளி கிழங்கில் மாவுப்பூச்சி பரவல் கட்டுப்படுத்த ஆலோசனை

Added : டிச 04, 2020
Share
Advertisement
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில், தோட்டக்கலைத் துறை சார்பில், மரவள்ளி கிழங்கு பயிரில், மாவுப்பூச்சி கட்டுப்பாடு குறித்து, விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். முன்னோடி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மரவள்ளி மாவுப்பூச்சிக்கான ஒட்டுண்ணிகள், மாவட்ட மரவள்ளி சாகுபடி

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில், தோட்டக்கலைத் துறை சார்பில், மரவள்ளி கிழங்கு பயிரில், மாவுப்பூச்சி கட்டுப்பாடு குறித்து, விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். முன்னோடி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மரவள்ளி மாவுப்பூச்சிக்கான ஒட்டுண்ணிகள், மாவட்ட மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு, பெங்களூருவில் உள்ள தேசிய பூச்சிகள் வள அமைவகத்தில், மரவள்ளி மாவுப்பூச்சி மேலாண்மை குறித்து பயிற்சி வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். மரவள்ளி மாவுப்பூச்சியின் தோற்றம், பரவும் விதம், மாவுப்பூச்சிக்கு சாதகமான பருவகாலங்கள், மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, காணொலி காட்சி மூலம் விளக்கப்பட்டது. மரவள்ளி மாவுப்பூச்சிகள் அழிக்கும் ஒட்டுண்ணிகள், தாய்லாந்து மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. வேளாண் இணை இயக்குனர் அசோகன், தோட்டக்கலை துணை இயக்குனர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X