நாமக்கல்: விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, நாமக்கல்லில், தி.மு.க., சார்பில், நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், டிச., 5ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையொட்டி, நாமக்கல்-மோகனூர் சாலை, அண்ணாதுரை சிலை அருகில், நாளை காலை, 9:00 மணிக்கு, கொ.ம.தே.க., பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலும், தி.மு.க., துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE