பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்முக தேர்வு எப்போது நடக்கும் என, எதிர்பார்ப்பில் உள்ளனர். பள்ளிபாளையம் ஒன்றியத்தில், 15 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு, 18 இடங்களில் சத்துணவு அமைப்பாளர்கள், 33 இடங்களில் சமையல் உதவியாளர்கள் பணி காலியிடமாக உள்ளது என, கடந்த செப்டம்பர் மாதம் ஊராட்சி அலுவலகத்தில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதில், சத்துணவு மையத்தில் பெயர், இன சுழற்சி, முன்னுரிமை போன்ற விபரங்களும் இடம் பெற்றிருந்தன. அதன்படி, 18 சத்துணவு அமைப்பாளர் காலியிடங்களுக்கு, 382 பேரும், 33 சமையல் உதவியாளர் பணிக்கு, 156 பேரும் விண்ணப்பித்தனர். இதில் ஒரு சிலர் தவிர, பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள், இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டதால், எப்போது நேர்முக தேர்வுக்கு அழைப்பு வரும் என, விண்ணப்பித்தவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE