பொது செய்தி

தமிழ்நாடு

கபீர் புரஸ்கார் விருது: விண்ணப்பம் வரவேற்பு

Added : டிச 04, 2020
Share
Advertisement
நாமக்கல்: 'கபீர் புரஸ்கார் விருதுக்கு, தகுதியான நபர்கள் வரும், 10க்குள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் மெகராஜ் அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை: ஒரு சாதி, இனம் அல்லது வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இனம் அல்லது வகுப்பை சேர்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின் போதோ, வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும்

நாமக்கல்: 'கபீர் புரஸ்கார் விருதுக்கு, தகுதியான நபர்கள் வரும், 10க்குள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் மெகராஜ் அறிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: ஒரு சாதி, இனம் அல்லது வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இனம் அல்லது வகுப்பை சேர்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின் போதோ, வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில், 'கபீர் புரஸ்கார் விருது' வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள், மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி அதற்கான விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து வரும், 10க்குள், மாவட்ட சமூகநல அலுவலர், அறை எண்-19, மாவட்ட கலெக்டர் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 04286 -280230 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X