வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை உலக மண்வள தின நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை உலக மண்வள தின நிகழ்ச்சி

Added : டிச 04, 2020
Share
நாமக்கல்: நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (டிச., 5) உலக மண்வள தின நிகழ்ச்சி நடக்கிறது.இதுகுறித்து, அறிவியல் நிலையத்தலைவர் அகிலா வெளியிட்டுள்ள அறிக்கை: மண் வளம் சம்பந்தமான விழிப்புணர்வை விவசாயிகள், மாணவர்கள், விவசாய பெண்கள் மற்றும் களப்பணியாளர்கள் இடையே ஏற்படுத்தும் வண்ணம் உலக மண் வள தினம் ஒவ்வொரு ஆண்டும் டிச., 5ல் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை

நாமக்கல்: நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (டிச., 5) உலக மண்வள தின நிகழ்ச்சி நடக்கிறது.


இதுகுறித்து, அறிவியல் நிலையத்தலைவர் அகிலா வெளியிட்டுள்ள அறிக்கை: மண் வளம் சம்பந்தமான விழிப்புணர்வை விவசாயிகள், மாணவர்கள், விவசாய பெண்கள் மற்றும் களப்பணியாளர்கள் இடையே ஏற்படுத்தும் வண்ணம் உலக மண் வள தினம் ஒவ்வொரு ஆண்டும் டிச., 5ல் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை காலை, 10:00 மணிக்கு நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடக்கும் உலக மண்வள தின நிகழ்ச்சியில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம், மண்வள மேம்பாட்டு மற்றும் மானவாரி காலங்களில் மண்ணில் நீர் பிடிப்பு திறனை மேம்படுத்தும் முறைகள் மற்றும் மண்வாழ் உயிரினங்களை பாதுகாத்தல் குறித்து விளக்கமளிக்கப்படும். அத்துடன் மண் மற்றும் பாசனநீர் சேகரிக்கும் முறை, விதை நேர்த்தி, தரமான மட்கும் உரம், ஊட்டமேற்றிய நுண்ணூட்டக்கலவை தயாரித்தல் மற்றும் பல்வாழ் உயிரினங்களை பாதுகாத்து மண்ணை உயிரோட்டமுள்ளதாக வைத்திருத்தல் குறித்த செயல் விளக்கம், மண்வளத்தை மேம்படுத்த தேவையான முக்கிய இடுப்பொருட்களான நவதானியம் கொண்டு பயிர்செய்யப்பட்ட மாதிரி திடல்களுக்கும் நேரடியாக அழைத்து சென்று காண்பிக்கப்படும். முடிவில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளும் வழங்கப்படும். விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X