இடையூறான மண் குவியல்: நடவடிக்கை அவசியம்

Added : டிச 04, 2020
Share
Advertisement
பள்ளிபாளையம்: கீழ்காலனி பகுதியில் குடிநீர் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட மண், அங்கு குவியலாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பள்ளிபாளையம் அடுத்த, கீழ்காலனி பகுதியில் மேம்பாலம் அருகில் செல்லும் சாலையின் கீழ் பகுதியில், பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இது சேதமடைந்து, சாலையின் மேற்பரப்பில் தண்ணீர் வந்து விட்டது. கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன், சேதமடைந்த

பள்ளிபாளையம்: கீழ்காலனி பகுதியில் குடிநீர் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட மண், அங்கு குவியலாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பள்ளிபாளையம் அடுத்த, கீழ்காலனி பகுதியில் மேம்பாலம் அருகில் செல்லும் சாலையின் கீழ் பகுதியில், பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இது சேதமடைந்து, சாலையின் மேற்பரப்பில் தண்ணீர் வந்து விட்டது. கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன், சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க, பொக்லைன் மூலம் சாலையில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு சீரமைக்கும் பணி நடந்தது. பின்னர் பள்ளத்தில் தோண்டப்பட்ட மண்னை, சாலை மட்டத்தில் சமன்படுத்தி சீரமைக்காமல், அங்கு குவித்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். வயதானவர்கள் டூ வீலரில் கவனகுறைவாக சென்றால், நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்புள்ளது. எனவே, குவியலாக உள்ள மண்ணை சாலை மட்டத்தினளவு சமன்படுத்தி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X