கரூர்: ''நடப்பு ஆண்டில், 2,035 மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்க இலக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார்.போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இரு சக்கர வாகனங்களை வழங்கி பேசியதாவது: கரூர் மாவட்டத்தில், 4,590 பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 4,165 மகளிருக்கு, 10.38 கோடி ரூபாய் மானியத்தொகை செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, 365 மகளிருக்கு, 91.25 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல,112 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 50.17 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக, 500 வாகனங்கள் சேர்க்கப்பட்டு மொத்தம், 2,035 மகளிருக்கு வாகனங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இணை இயக்குநர் வாணி ஈஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஹஸரத்பேகம் உட்பட பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE