பொது செய்தி

தமிழ்நாடு

புரெவி புயல் எதிரொலி: கரூரில் பரவலாக மழை

Added : டிச 04, 2020
Share
Advertisement
கரூர்: புரெவி புயல் எதிரொலியாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. வங்க கடலில் கடந்த மாதம், 28ல் உருவான புரெவி புயல், நேற்று முன்தினம் இலங்கையை கடந்தது. தொடர்ந்து நேற்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலின் தாக்கம் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில்

கரூர்: புரெவி புயல் எதிரொலியாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. வங்க கடலில் கடந்த மாதம், 28ல் உருவான புரெவி புயல், நேற்று முன்தினம் இலங்கையை கடந்தது. தொடர்ந்து நேற்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலின் தாக்கம் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் நேற்று, வானம் மேகமூட்டமாக இருந்தது. பல்வேறு இடங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்தது. குறிப்பாக, கரூர் நகரம், பசுபதிபாளையம், வெங்கமேடு உட்பட பல பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. நேற்று காலை, 8.00 மணி நிலவரப்படி மழையளவு(மி.மீ.,) கரூர், 4, அரவக்குறிச்சி, 5, அணைப்பாளையம், 7, க.பரமத்தி, 4, குளித்தலை, 11, தோகைமலை, 28, கிருஷ்ணராயபுரம், 8, மாயனூர், 10, கடவூர், 20, பாலவிடுதி, 31, மயிலம்பட்டி, 23 என மொத்தம், 166.20 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. சராசரியாக, 13.85 மி.மீ., மழையளவு பெய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X