திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் பாதுகாப்பில்லை: கண்டுகொள்ளாத போலீசாரால் அதிருப்தி| Dinamalar

தமிழ்நாடு

திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் பாதுகாப்பில்லை: கண்டுகொள்ளாத போலீசாரால் அதிருப்தி

Added : டிச 04, 2020
Share
திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. மாற்றுத்திறன் குழந்தையை தவிக்க விட்டு சென்ற கல்நெஞ்ச தாய் குறித்து ரயில்வே போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.கடந்த, 1ம் தேதி, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்மில், 2.5 வயதுடைய ஒரு பெண் குழந்தை தனியே இருக்கையில் அமர்ந்து, அழுது கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக
 திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் பாதுகாப்பில்லை: கண்டுகொள்ளாத போலீசாரால் அதிருப்தி

திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. மாற்றுத்திறன் குழந்தையை தவிக்க விட்டு சென்ற கல்நெஞ்ச தாய் குறித்து ரயில்வே போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

கடந்த, 1ம் தேதி, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்மில், 2.5 வயதுடைய ஒரு பெண் குழந்தை தனியே இருக்கையில் அமர்ந்து, அழுது கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குழந்தை அழுத நிலையில், பரிதாபப்பட்ட பயணி ஒருவர், 'சைல்டு லைன்' அமைப்புக்கு தகவல் தெரிவித்தார்.ரயில்வே ஸ்டேஷன் வந்த 'சைல்டு லைன்' அமைப்பினர், ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரித்த போது, குழந்தை எப்படி வந்தது என தெரியவில்லை. குழந்தை அழுதுஅழுது மிகவும் சோர்வுடன் காணப்பட்டதால், தலைமை அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து மாற்றுத்திறன் குழந்தைக்கு உணவு அளித்து, பராமரிப்பில் வைத்துள்ளனர்.ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில், பிளாட்பார்ம் உட்பட எட்டு இடங்களில் 'சிசிடிவி' காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இவற்றில் எதுவும் இயக்கத்தில் இல்லாமல் 'டம்மியாக' இருந்ததால், மாற்றுத்திறன் குழந்தையை யார் பிளாட்பார்மில் கொண்டு வந்து விட்டு சென்றது, பெற்றோரா, உறவினரா, கடத்தி வரப்பட்டதா என்ற தகவலை ரயில்வே போலீசாரால், கண்டுபிடிக்க முடியவில்லை.

இரண்டு மணி நேரமாக குழந்தை பிளாட்பார்மில் அழுது கொண்டிருந்தும் பயணி ஒருவர் தெரிவித்த பின்பே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிந்துள்ளது. இதன்மூலம் ரயில்வே ஸ்டேஷனில் பகலிலேயே பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.எது நடந்தாலும், ரயில்வே போலீசார் ஸ்டேஷனை விட்டு வெளியே தலைகாட்டுவதில்லை. திருப்பூரில், வட மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனைவரும் ரயில் மூலமே, வருகின்றனர்.

கடந்தாண்டு, வங்கதேசத்தில் இருந்து ரயில் மூலம் போலி ஆதார் அட்டையுடன் வந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, திருப்பூருக்கு வெளி மாநில மற்றும் வங்கதேசம், நேபாள நாட்டை சேர்ந்தவர்களால், ஏதாவது அச்சுறுத்தல் என்ற நிலையில், ரயில்வே ஸ்டேஷன் இவ்வாறு, பாதுகாப்பாற்ற முறையில் உள்ளது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X