மும்பை: குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெபோ) மாற்றமில்லாமல் 4 சதவீமாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: ரெப்போ வட்டி வகிதத்தை 4 சதவீதமாகவே தொடர வேண்டும் என நிதி கொள்கை குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. 2021ன் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.5 சதவீதமாக இருக்கும். ஊரக பகுதியில் தேவை அதிகரிப்பு காரணமாக பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்துவதுடன், கிராமப்புறங்களின் தேவை அதிகரிப்பும் நல்ல பலத்தை அளிக்கும். பொருளாதார வளர்ச்சியானது, 3ம் காலாண்டில் பிளஸ் 0.1 சதவீதமாகவும், 4ம் காலாண்டில் பிளஸ் 0.7 சதவீதமாகவும் இருக்கும். இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.
