பொது செய்தி

இந்தியா

தேன் தரம் பரிசோதனை பற்றி அறிக்கை கேட்கும் ஆணையம்

Added : டிச 04, 2020
Share
Advertisement
புதுடில்லி : தேன் உற்பத்தி நிறுவனங்களின் தேனின் தரத்தை பரிசோதித்தது பற்றி சி.எஸ்.இ. எனப்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையத்திடம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.நாட்டில் தேன் உற்பத்தியில் முன்னணியில் உள்ள 'டாபர் பதஞ்சலி ஆயுர்வேதா உட்பட 13 நிறுவனங்களின் தேனின் தரத்தை சி.எஸ்.இ பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டது.இதில் மூன்று

புதுடில்லி : தேன் உற்பத்தி நிறுவனங்களின் தேனின் தரத்தை பரிசோதித்தது பற்றி சி.எஸ்.இ. எனப்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையத்திடம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

நாட்டில் தேன் உற்பத்தியில் முன்னணியில் உள்ள 'டாபர் பதஞ்சலி ஆயுர்வேதா உட்பட 13 நிறுவனங்களின் தேனின் தரத்தை சி.எஸ்.இ பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டது.இதில் மூன்று நிறுவனங்களை தவிர மற்ற நிறுவனங்களின் தேனில் 'சிந்தெடிக் சுகர்' எனப்படும் செயற்கை சர்க்கரை பாகு கலக்கப்படுவது தெரிந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.எஸ்.இ.யின் இந்த ஆய்வை அந்த நிறுவனங்கள் ஏற்க மறுத்துள்ளன.
இந்நிலையில் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னணி நிறுவனங்களின் தேனின் கலப்படம் செய்யப்படுவதை எஸ்.எம்.ஆர். சோதனை மூலம் கண்டறியாமல் வேறு முறைகளில் கண்டறிந்துள்ளது. எஸ்.எம்.ஆர். சோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் அந்த சோதனையை சி.எஸ்.இ. மேற்கொள்ளவில்லை.சோதனை பற்றிய அறிக்கையை ஆணையத்திடம் சி.எஸ்.இ. தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை பார்த்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X