அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலை மையமாக கொண்டு அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்: முதல்வர் பழனிசாமி

Updated : டிச 04, 2020 | Added : டிச 04, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
மதுரை: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தேர்தலை மையமாக கொண்டு அரசை விமர்சிப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.மதுரை மாநகர பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 1295.76 கோடி மதிப்பில் மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு அணை லோயர் கேம்பிலிருந்து நாள் ஒன்றுக்கு 125 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் வழியே மதுரைக்கு கொண்டு
முதல்வர், பழனிசாமி, ஸ்டாலின்

மதுரை: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தேர்தலை மையமாக கொண்டு அரசை விமர்சிப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மதுரை மாநகர பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 1295.76 கோடி மதிப்பில் மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு அணை லோயர் கேம்பிலிருந்து நாள் ஒன்றுக்கு 125 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் வழியே மதுரைக்கு கொண்டு வரும் திட்டத்திற்கு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டடம் மற்றும் சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 72 கோடி மதிப்பிலான திட்டங்களையும் திறந்து வைத்தார்.


latest tamil news



பின்னர் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: அனைத்து துறைகளிலும் தமிழக அரசு முத்திரை பதித்து வருகிறது. குடிநீர் பிரச்சினைக்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தேர்தலை மையமாக கொண்டு அரசை விமர்சிக்கிறார். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் விநியோக திட்டம் 2023ல் நிறைவு பெறும். புதிய திட்டத்தால் மதுரையில் 1.10 லட்சம் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-டிச-202018:17:11 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு என்ன பழனி நீ KORANAA இல்லாதவனை எல்லாம் பிடித்து கொண்டு பொய் 9000 கோடி செலவு என்று சுருட்டினயே அது எதுக்கு அடுத்த தேர்தலுக்கு தானே என்னவோ உத்தம வில்லன் போல பேசுற , உன் மண்டையில் மீண்டும் அடித்து 2000 கோடி OPTICAL FIBRE டெண்டர் விடக்கூடாது என்று DELLI சொல்லுச்சே அது மறந்து விடிய, இல்லை அந்த சந்தோஷ் பாபு வேலையே வானம் என்று சொல்லி ஓடி விட்டானே மறந்து விடிய பழனி
Rate this:
Cancel
04-டிச-202016:23:06 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இந்துமத விரோதி சுடலை கான் கொள்ளையடிக்க முடியாமல் பதவி வெறிபிடித்து திரிகிறான்
Rate this:
Cancel
04-டிச-202015:09:25 IST Report Abuse
ஆப்பு இவுரு மட்டும் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆங்காங்கே நடுகல்... மன்னிக்கவும் அடிக்கல் நாட்டிக்கிட்டே போகலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X