01. உ .பி., லக்னோவில் இந்து பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த முஸ்லிம் இளைஞனின் திருமண நிகழ்ச்சி போலீசாரால் தடுத்து நிறுத்தம்.

02. பெங்களூருவில் 6 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்த 3 பேருக்கு கோர்ட் 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
03. மும்பை கண்டிவாலி என்ற பகுதியில் தந்தை மகள், மகன் ஒரே வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்தனர். கடன் திரும்ப செலுத்த முடியாத துயரத்தால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
04. உ.பி., மாநிலம் பாண்டா பகுதியில் விவசாயி ஒருவர் கடன் சுமையால் மரத்தில் தூக்கில் தொங்கினார்.
05. காஷ்மீரின் அனந்தனாக் மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் வேட்பாளர் அனீசூல் இஸ்லாம், மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
தமிழகத்தின் நிகழ்வு
01. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கான்ட்ராக்டர் முனியநாதன் வீட்டில் கதவை உடைத்து 200 பவுன் நகை கொள்ளை போனது. போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
02. நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அருள்பாண்டியன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது .

உலக நடப்பு
01. பிரிட்டனில் அவான்மவுத் பகுதியின் கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பலியாயினர் .
02. இலங்கை கம்பகாமகர சிறையில் ஏற்பட்ட மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE