ஐதராபாத் : ஐதராபாத் மாநகராட்சிக்கு நடந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி வருவதால் இந்த விஷயம் இன்று(டிச., 4) டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு டிச., 1ல் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் 10, ஓவைசியின் எஐஎம்ஐஎம் கட்சி 51 இடங்களில் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் இன்று(டிச., 4) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் பா.ஜ., கட்சி அதிக இடங்களை பெற்று முன்னிலை வகித்தது. இதனால் பா.ஜ., தலைவர்களும், அந்தக்கட்சியை சேர்ந்த தொண்டர்களும் தங்களது மகிழ்ச்சியை சமூகவலைதளங்கள் வாயிலாக தெரிவித்தனர். சில ஊர்களில் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கூட கொண்டாடினர். ஆனால் போக போக அதில் மாற்றம் ஏற்பட்டது. டிஆர்எஸ்., கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் ஓவைசியின் எஐஎம்ஐஎம் கட்சி உள்ளது. மூன்றாம் இடத்திற்கு பா.ஜ., தள்ளப்பட்டது.

காலையில் பா.ஜ., முன்னிலை வகித்த போது அதை கொண்டாடிய அவரது கட்சியினர் சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக பல கருத்துக்களை பதிவிட்டனர். மக்களுக்கு தெரியும் யாருக்கு யார் தேவை என கருத்து பதிவிட்டனர். சிலர் இது ஒட்டுமொத்த ஐதராபாத் மக்களுக்கு கிடைத்த வெற்றி என பதிவிட்டனர். அதே சில மணிநேரங்களில் அந்த கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதும் பிற கட்சியினர் அவர்களை டிரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதனால் ஐதராபாத் தேர்தல் முடிவுகள் சமூகவலைதளங்களில் பரபரப்பாகின. தேர்தல் முடிவுகள் காலை முதலே தேசிய அளவில் #GHMCResults, #GHMCElectionresults, #HyderabadElection போன்ற ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE