சென்னை: மத்திய குழுவினர்இன்று தமிழகம், புதுச்சேரியில் ஆய்வு செய்ய உள்ளனர்.
‛நிவர்' புயலால் சென்னை, கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு சேதம் மதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு கடந்த 1ம் தேதி சென்னை வருவதாக இருந்தது. ஆனால், ‛புரெவி' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய குழுவினர் நாளை தமிழகம் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 4 நாள் பயணமாக வரும் இக்குழுவினர், 6 மற்றும் 7 ம் தேதிகளில் புயல் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். இன்று மதியம், தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்கின்றனர். 8ம் தேதியும் ஆய்வு பணியில் ஈடுபடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE