பொது செய்தி

தமிழ்நாடு

வரும் திங்கள் முதல் நீலகிரியில் சுற்றுலா தலங்கள் திறப்பு

Added : டிச 04, 2020
Share
Advertisement
ஊட்டி: நீலகிரியில், கொரோனா தொற்று காரணமாக தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, வனத்துறை சார்பில் நடத்தப்பட்டு வந்த அனைத்து சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. செப்., 1ம் தேதி முதல் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான அனைத்து பூங்காக்கள் திறக்கப்பட்டது. மற்ற சுற்றுலா தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டது. கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறுகையில், தமிழக அரசு உத்தரவுப்படி,
வரும் திங்கள் முதல் நீலகிரியில் சுற்றுலா தலங்கள் திறப்பு


ஊட்டி: நீலகிரியில், கொரோனா தொற்று காரணமாக தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, வனத்துறை சார்பில் நடத்தப்பட்டு வந்த அனைத்து சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. செப்., 1ம் தேதி முதல் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான அனைத்து பூங்காக்கள் திறக்கப்பட்டது. மற்ற சுற்றுலா தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டது.

கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறுகையில், தமிழக அரசு உத்தரவுப்படி, டிச., 7ஆம் தேதி முதல் நீலகிரியில் உள்ள வனத்துறை , சுற்றுலா துறைக்கு சொந்தமான அனைத்து சுற்றுலா தலங்கள் திறக்கப்படும். அதேபோல், முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு குறித்து தமிழக அரசு உத்தரவுக்கு பின் திறக்கப்படும் என, தெரிவித்தார். மேலும், திரை அரங்குகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து, இன்று(டிச.,04)முதல் ஊட்டியில் உள்ள அசெம்பிளி தியேட்டர் திறக்கப்பட்டது. இங்கு சினிமா பார்க்க ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். என்றார்.

சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டதால் அந்தந்த பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது.


பழமை வாய்ந்த தியேட்டர் திறப்பு

ஊட்டியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தியேட்டர் இன்று திறக்கப்பட்டது. அரசு சார்பில் இயங்கும் தியேட்டர் இதுதான். ஆங்கிலேயர் காலத்தில் கூட்டம் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட அரங்கம், பின்னர் தியேட்டராக மாறியது. இதன் சேர்மனாக கலெக்டர் உள்ளார். குழு உறுப்பினர்கள் உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 16ல் மூடப்பட்டது. இது புதுப்பித்து இன்று திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X