பொது செய்தி

இந்தியா

​இந்தியா 'சூப்பர்' வெற்றி: மூன்று விக்கெட் சாய்த்தார் நடராஜன்

Updated : டிச 04, 2020 | Added : டிச 04, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
கான்பரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகத்தில் மிரட்டிய 'யார்க்கர்' நடராஜன், 'சுழல்' சகால் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கான்பராவில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்
#AUSvIND, australia, India, cricket, klrahul, jadeja

கான்பரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகத்தில் மிரட்டிய 'யார்க்கர்' நடராஜன், 'சுழல்' சகால் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கான்பராவில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, தீபக் சகார் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தின் 'யார்க்கர்' நடராஜன், 'டுவென்டி-20' அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார்.


ராகுல் அரைசதம்


இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. ஸ்டார்க் 'வேகத்தில்' பந்தில் தவான் (1) போல்டானார். கோஹ்லி 9 ரன்னுக்கு அவுட்டாகினார். ராகுல், 37 வது பந்தில் அரைசதம் அடித்தார். சாம்சன், 15 பந்தில் 23 ரன்கள் எடுத்து, கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். ஜாம்பா சுழலில் மணிஷ் பாண்டே (2) திரும்பினார். 40 பந்தில் 51 ரன் எடுத்த ராகுல், ஹென்ரிக்ஸ் பந்தில் சரிந்தார். பாண்ட்யா 16. வாஷிங்டன் சுந்தர் 7 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 20 ஒவரில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.


latest tamil news




சகால் 'இரண்டு'


ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், ஷார்ட் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இந்திய அணியின் பீல்டிங்கும் சுமாராக அமைந்தது. சகாரின் 2வது ஓவரில் பின்ச் கொடுத்த கேட்ச்சை மணிஷ் பாண்டே நழுவவிட்டார். அடுத்த பந்தில் ஷார்ட் கேட்ச்சை, கோஹ்லி கோட்டை விட்டார். இந்நிலையில் சகால் சுழலில் பின்ச் (35) அவுட்டானார். மீண்டும் மிரட்டிய சகால், ஸ்மித்தை (12) வெளியேற்றினார்.


latest tamil news



நடராஜன் திருப்பம்


மறுபக்கம் 'தமிழக எக்ஸ்பிரஸ்' நடராஜன், அபாயகரமான மேக்ஸ்வெல்லை, 2 ரன்னுக்கு அவுட்டாக்கினார். இதன் பின் போட்டி இந்திய அணி பக்கம் திரும்பியது. தொடர்ந்து அசத்திய நடராஜன், ஷார்ட்டை (34) 'பெவிலியன்' திருப்பி அனுப்பினார். மீ்ண்டும் வந்த சகால், மாத்யூ வேட்டை (7) அவுட்டாக்கினார். வேகம் காட்டிய ஹென்ரிக்ஸ் (30), சகார் 'வேகத்தில்' வீழ்ந்தார். மறுபக்கம் நடராஜன் 'யார்க்கரில்' ஸ்டார்க் (1) போல்டானார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 150 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. இந்திய அணி சார்பில் நடராஜன் 3, சகால் 3 விக்கெட் கைப்பற்றினர்,


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mupaco - Madurai,இந்தியா
05-டிச-202011:45:57 IST Report Abuse
mupaco இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் இடது கை பந்துவீச்சு மற்றும் பேட்டிங் தேவையை.
Rate this:
Cancel
சிவ.இளங்கோவன் . - நாளைய முதல்வன் ஸ்டாலின் ,இந்தியா
05-டிச-202011:35:27 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . வாழ்த்துக்கள் நடராசன் .
Rate this:
Cancel
05-டிச-202009:26:09 IST Report Abuse
ருத்ரா நம் இந்திய வெற்றிக்கு வளம் சேர்க்கும் வலுவான எண்ணம் மற்ற இந்திய வீர்களை போல் இவருக்கும் தொடர்ந்திருக்க வாழ்த்து கிறேன். வெற்றி Teamwork.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X